சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
x

சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்

மதுரை


மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் 12 நேர வேலை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாவேல்சிந்தன், செயலாளர் செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழக அரசின் தொழிற்சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.


Related Tags :
Next Story