இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பத்மநாபன், கமிட்டி செயலாளர்கள் பாலு, ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனி கண்டன உரையாற்றினார். வேங்கை மகன் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சின்ராஜ், நகர தலைவர் தீபன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story