இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும், ஆன்லைன் ரம்மி மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஜெகநாதன், விழுப்புரம் மாவட்ட தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். இதில் கலந்துகொண்ட ஒருவர் பட்டை நாமம் வரையப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டரை தலையில் தூக்கி வைத்திருந்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி செயலாளர் ரமேஷ், துணை தலைவர் கணேசன், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் மணி, கள்ளக்குறிச்சி ஒன்றிய தலைவர் சங்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.