இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டி இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியினர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.வி.ஆர்.ரகுபதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான வரிகளை குறைத்து, மானியம் வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதன் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.


Next Story