இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் முற்றுகை


இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் முற்றுகை
x

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் முற்றுகை

நாகப்பட்டினம்

மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூசன்சரண்சிங்கை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் மேகலா தலைமை தாங்கினார். ஏ.ஐ.ஒய்.எப். மாவட்ட செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் தமீம்அன்சாரி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சரபோஜி, மாவட்ட பொருளாளர் பாபுஜி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூசன்சரண்சிங்கை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கலந்துகொண்டனர்.


Next Story