இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் அப்துல் ரசாக் சிறப்புரையாற்றினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சஞ்சய் காந்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் குளித்தலையில் பிரசார இயக்கம் நேற்று நடத்தப்பட்டது. இதற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். வட்டார அமைப்பாளர் தேவகி முன்னிலை வகித்தார். இந்த பிரசார இயக்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது. பின்னர் கோரிக்கைகளை கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன.