இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) வேலூர் மாவட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காத்தவராயன், இணைச்செயலாளர்கள் சரவணன், சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. கட்சி மாவட்ட செயலாளர் பரசுராமன், நகர தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், துணைத்தலைவர் காசி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் காலியாக உள்ள மற்றும் பணி ஓய்வுபெறும் இடங்களை அவுட்சோர்சிங் முறையில் பணி அமர்த்துவதை கைவிட வேண்டும்.
நிரந்தர பணியில் ஒப்பந்த முறையை புகுத்த கூடாது. ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய தொழிலாளர் சட்டம், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.