இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 75-வது ஆண்டு பவள விழா மாநாடு தொடர்பான மாவட்ட ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன் வரவேற்று பேசினார். மாவட்ட, வார்டு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர், மாநில துணைத்தலைவர் கோதர் மைதீன், நவாஸ் கனி எம்.பி., யூத் லீக் மாநில துணைத்தலைவர் செய்யது பட்டாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் கோவில்பட்டி, ஏரல், ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, காயல்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மீராசா நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு பிறகு மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75-வது ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு அகில இந்திய மாநாடு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாடு, வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் மாநாடாக அமையும். இதில் பல்வேறு அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பதில் கூற வேண்டும்' என்றார்.


Next Story