இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நீலகிரி

ஊட்டி,

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து, பாரதீய ஜனதா கட்சி நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பைசில்கான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் ரிஸ்வான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story