நிலவுக்கு செல்லும் இந்தியர்கள் - திரவ திட்ட இயக்குநர் தகவல்
மனிதர்களை நிலவிற்கு அழைத்து செல்வதற்கான சோதனை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ எரிபொருள் மையத்தின் திட்ட இயக்குனர்ராக இருப்பவர் டாக்டர் வி. நாராயணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த அறிவுரைகளை வழங்கினார். பின்னர் மாணவர்களிடம் அறிவியல் சம்பந்தமான கலந்துரையாடலும் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
சந்திராயன் 3 திட்டம் என்பது நூற்றுக்கு நூறு வெற்றியடைந்த ஒரு திட்டம் ஆகும். அதனால் நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக தரை இறங்கிய இந்தியாவை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஆதித்யா எல் 1 திட்டம் மூலம் சூரியனை ஆய்வு செய்யும் 4 வது நாடக இந்தியா விளங்குகிறது என்றும் கூறினார். பின்னர் ககன்யான் திட்டம் பற்றி பேசி அவர் இதில் முதலில் ஆள் கடலுக்குள் மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்து பின்னர் நமது இந்திய வீரர்களை நமது விண்கலம் மூலம் விண்வெளிக்கு அழைத்து செல்லப்படுவர். விண்கலம் விண்வெளியில் ஒரு 3 அல்லது 4 நாட்கள் அவர்களுடன் சுற்றும் .பின்னர் அவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவர். மேலும் இந்தியர்களை நிலவிற்கு அழைத்து செல்லும் சோதனை நடைபெற்று வருகிறது, இவ்வாறு அவர் பேசினார்.