இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ; இன்னும் ஒரு ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என தகவல்
மெட்ரோ ரெயில் பாதைக்கான கட்டுமான பணிகள் 2023 டிசம்பரில் நிறைவடையும் என கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா,
நாட்டிலேயே முதல் முறையாக தண்ணீருக்கு அடியில் செல்லும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை செயல்படுத்த கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரு நதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி நதிக்கு உள்ளே குகைப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மெட்ரோ ரெயில் பாதைக்கான கட்டுமான பணிகள் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்றும் கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 120 கோடி ரூபாய் என்ற வீதத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகள், தற்போது கிலோ மீட்டருக்கு 150 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story