தனித்தேர்வர்கள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்


தனித்தேர்வர்கள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
x

தனித்தேர்வர்கள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் எழுதவுள்ள தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதற்காக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத்தவறும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட தனித்தேர்வர்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தோம்னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும், ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட தனித்தேர்வர்கள் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.


Next Story