ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிற்சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க்.சுப்பிரமணியன், வடக்கு மாநகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன்பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் கணேசன், பொருளாளர் மணவாளன் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story