தொழில் முதலீட்டு கழக சிறப்பு கடன் முகாம்
தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு கடன் முகாம் நாளை தொடங்குகிறது.
தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு கடன் முகாம் நாளை தொடங்குகிறது.
கடன் முகாம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடன் வழங்கி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் மேளா (முகாம்) நாளை (திங்கட்கிழமை) ெதாடங்குகிறது. இந்த மேளா செப்டம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது சிறப்பு தொழில் கடன்மேளாவாகும்.
மூல தன மானியம்
இந்த கடன் மேளாவில் தொழில் முதலீட்டு கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
நீட்ஸ் திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. எனவே இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
அரிய வாய்ப்பு
இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் புதிய தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.