தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை பிணம்


தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை பிணம்
x

பூதலூர் அருகே தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை பிணமாக கிடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தஞ்சாவூர்

திருவையாறு:

பூதலூர் அருகே தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை பிணமாக கிடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை பிணம்

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே முத்தாண்டிப்பட்டி ஆலடிக்கு ஏரி கரையில் உள்ள பாலத்தின் அடியில் பிறந்து சில நேரமான பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் உடலில் ரத்தகாயங்களுடன் ஒரு பையில் பிணமாக கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கரிகாலனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர், பூதலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் மூலம் பிறந்ததால் குழந்தை கொலை செய்து உடலை பையில் வைத்து வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொப்புள் கொடியுடன் குழந்தை காயங்களுடன் பிணமாக கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story