பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்ற தகவலில் உண்மையில்லை: பள்ளி கல்வித்துறை விளக்கம்


பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்ற தகவலில் உண்மையில்லை: பள்ளி கல்வித்துறை விளக்கம்
x

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது. நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் பரவி வந்தது.

இந்த நிலையில் தான், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story