கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம்
கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா, கள் விற்பனை மற்றும் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 94896-46744 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story