மதுரையில் தகவல் தொழில் நுட்ப 'டைடல் பூங்கா' அமைக்கப்படும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தென்மண்டல அளவிலான மாநாடு நடைபெறுகிறது.
மதுரை,
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தென்மண்டல அளவிலான மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் ..அவர் கூறியதாவது ;
தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் தான்.தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது. மதுரையில் இயங்கி வரும் 50,000 சிறு குறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது."தமிழகத்தை 2030ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றும் நோக்கில் இயங்கி வருகிறோம்.
மதுரையில் தகவல் தொழில் நுட்ப 'டைடல் பூங்கா' அமைக்கப்படும் .மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் 2 கட்டங்களாக ரூ. 600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா.டைடல் நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைத்து டைடல் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும்"