சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் குழுமம் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் குழுமம் தொடங்கப்பட்டது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் உயிர்த்தொழில் நுட்பவியல் துறையின் சார்பில் உயிர் வேதியியல் குழுமம் தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு. துறைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரும், பேராசிரியருமான ஆர்.எம்.கதிரேசன் கலந்து கொண்டு உயிர் வேதியியல் குழுமத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் சமூகத்திற்கு தேவையான ஆராய்ச்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களின் ஆராய்ச்சி முடிவுகள் ஆய்வுக்கூடங்களில் இருந்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, ஆராய்ச்சி மற்றும் முது அறிவியல் மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் உயிர் வேதியியல் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். அறிவியல் புல முதல்வர் ராமசாமி வாழ்த்தி பேசினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவபாலன் நன்றி கூறினார்