சேலம் மத்திய சிறையில் கைதிகள் யோகாசனம்


சேலம் மத்திய சிறையில் கைதிகள் யோகாசனம்
x
தினத்தந்தி 22 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சர்வதேச யோகா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசனம் செய்தனர். அதன்படி, சேலம் மத்திய சிறையில் நேற்று உலக யோகா தினம் கடைபிடித்தனர். அப்போது, விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 200 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்தனர். கோவை ஈஷா யோகா மையத்தின் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பயிற்றுனர் அப்துல் காதர் கலந்து கொண்டு கைதிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார். நமஸ்காரம், மூச்சு பயிற்சி, தியானம் போன்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத், ஜெயிலர் மதிவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story