விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி


விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி
x

சலமநத்தத்தில் விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

வேலூர்

கணியம்பாடியை அடுத்த சலமநத்தம் கிராமத்தில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில், விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கணியம்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சவுபாக்கியலட்சுமி வரவேற்றார்.

இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இதில் வேளாண்மை அலுவலர் (பொறுப்பு) பொன்னழகு, தொழில்நுட்ப பயிற்றுனர் சம்பத், வேளாண் வணிக துறை உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசு, உதவி தோட்டகலை அலுவலர்கள் டென்னிசன் பிரபு, ஹரி, முரளி, தொழில்நுட்ப மேலாளர் விமல்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரத்குமார் உள்ளிட்டோர் அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.


Next Story