நில அபகரிப்பு புகார் மனுக்கள் மீது விசாரணை


நில அபகரிப்பு புகார் மனுக்கள் மீது விசாரணை
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு புகார் மனுக்கள் மீது கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விசாரணை மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு புகார் மனுக்கள் மீது கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விசாரணை மேற்கொண்டார்.

நிலுவை மனுக்கள்

குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் புகார் மனுக்களை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது புகார்தாரர்கள், எதிர்மனுதாரர்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கடந்த வாரம் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் மனுக்கள் வாங்கும் முகாம் மற்றும் நிலுவை மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் நடத்தப்பட்டது.

சிறப்பு முகாம்

இந்த நிலையில் நில அபகரிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள புகார் மனுக்களை விசாரித்து தீர்வு காணும் விதமாக சிறப்பு முகாம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். முகாமில் நில அபகரிப்பு தொடர்பாக 12 மனுக்கள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதற்காக மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 2 மனுக்களுக்கு மட்டும் தான் இருதரப்பில் இருந்தும் புகார்தார்கள் வந்திருந்தனர். அவர்களிடம் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் விசாரணை மேற்கொண்டார். புகாரில் கூறப்பட்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தார். மீதமுள்ள 10 மனுக்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே வந்திருந்தனர்.


Next Story