சின்ன வெங்காயம் செடியில் பூஞ்சை தாக்குதல்


சின்ன வெங்காயம் செடியில் பூஞ்சை தாக்குதல்
x

சின்ன வெங்காயம் செடியில் பூஞ்சை தாக்குதல்

திருப்பூர்

பல்லடம்,

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மழையால் சின்னவெங்காயத்தில் ஏற்படும் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது:-

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 40 - 50 நாள் வயதுடைய சின்னவெங்காய பயிர்கள் சாகுபடியில் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சின்னவெங்காய பயிர்களில் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

நோய் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் 10 லிட்டர் நீரில் டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் 50 மி.லி. என்ற அளவில் கலந்து வேர் பாகம் நனையுமாறு தெளிக்கவேண்டும். கார்பெண்டாசிம், மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை 20 மி.லி. ஐ, 10 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இதற்கு மாற்றாக புரோபிகோனசோல், 25 ஈசி, 20 மி.லி., ஐ 10 லிட்டர் வீதம் தெளிக்கலாம். 7 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்தால் ஏக்கருக்கு, 500 கிராம் கார்பெண்டாசிம் மற்றும் மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை, 25 கிலோ அமோனியம் சல்பேட் உடன் கலந்து அடி உரமாக போட வேண்டும். இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

---


Next Story