பூட்டிய வீட்டிற்குள்பிணமாக கிடந்த சாலை பணியாளர்:போலீசார் விசாரணை


பூட்டிய வீட்டிற்குள்பிணமாக கிடந்த சாலை பணியாளர்:போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே பூட்டிய வீட்டிற்குள் சாலை பணியாளர் பிணமாக கிடந்தார்.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 39). இவர், நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அபிநயா. இந்த தம்பதிக்கு கவின் என்ற மகன் உள்ளார். கடந்த 10-ந் தேதி அபிநயா, தனது மகனுடன் மயிலாடும்பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் சரவணகுமார் மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து கதவை தட்டி பாா்த்தனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடு்த்து அவர்கள் தென்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது நாற்காலியில் உடல் அழுகிய நிலையில் சரவணகுமார் பிணமாக இருந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story