காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்திஅரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்


காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்திஅரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

மத்திய அரசு வழங்கியது போல் 1.7.2022 முதல் நிலுவையுடன் அகவிலைப்படி வழங்கிட வேண்டும். ஒப்புவிப்பு விடுப்பு ஊதியம் பெறுவதற்கான தடையை ரத்து செய்திட வேண்டும். மருத்துவ விடுப்புக்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு நேரடியாக நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கடலூரில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாநில பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, கொசு ஒழிப்பு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் இருதயராஜ், மாநில பொது செயலாளர் தெய்வசிகாமணி, கடலூர் மாவட்ட தலைவர் அல்லிமுத்து ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர்.

இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் தேவராஜ், பிற சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் தங்கராசு, பரமசிவம், மாவட்ட செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலி போல் நின்றனர். முடிவில் மாவட்ட செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.


Next Story