அரியலூரில் ராணுவ கேண்டீன், மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்
அரியலூரில் ராணுவ கேண்டீன், மருத்துவமனை அமைக்க வலியுறுத்தப்பட்டது.
அரியலூர்
முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க ஆண்டு விழா அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் ராணுவ கேண்டீன் மற்றும் ராணுவ மருத்துவமனை அமைக்க வேண்டும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய குறைபாடுகள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக அரியலூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அச்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story