சிங்களம்கோம்பை ஏரியில் உதவி கலெக்டர் ஆய்வு
நாமக்கல்
எருமப்பட்டி:
எருமப்பட்டி பேரூராட்சி கைகாட்டி சிங்களம்கோம்பையில் சரப்பள்ளி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பும்போது அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த நிலையில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் பிரபாகர் சிங்களம்கோம்பை ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள் சிங்களம்கோம்பை ஏரியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தண்ணீர் வரும் பாைத, வெளியேறும் பாதையை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா, பா.ஜ.க.வை சேர்ந்த செந்தில் பாரதி மற்றும் விவசாயிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story