Normal
பாரம்பரிய இடங்கள் ஆய்வு
பாரம்பரிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை,
சிவகங்கை தமிழ் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொன்மையான பாரம்பரியமிக்க இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யும் தீரா உலா நிகழ்ச்சி தமிழ்ச் சங்க தலைவர் பகீரத நாச்சியப்பன் தலைமையிலும் நிறுவனத் தலைவர் ஜவஹர்கிருஷ்ணன் முன்னிலையில்ம் நடைபெற்றது. இவர்களுடன் 30-க்கும் மேற்பட்டவர்கள் திருமலை மலைகொழிந்தீஸ்வரர் ஆலய குடைவரை கோவில் மற்றும் திருமலையில் கல்வெட்டுகளை பார்வையிட்டனர். பின்னர் மயில்வராயன் கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த கோவில் மற்றும் ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் கோவிலை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை செயலாளர் முத்துப்பாண்டியன், முன்னாள் செயலாளர் யுவராஜ், பொருளாளர் கலைமகள், முத்துகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story