விசைப்படகுகளில் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு


விசைப்படகுகளில் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு
x

விசைப்படகுகளில் மீன்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 நாள் மீன்பிடி தடை காலத்தை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த 1½ மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள விசைப்படகுகளில் உறுதித்தன்மை, நீளம், அகலம் குறித்து மீன்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வானது இன்னும் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.


Next Story