290 பள்ளி வாகனங்கள் ஆய்வு


290 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

ஊத்தங்கரையில் 290 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், கிருஷ்ணகிரி போக்குவரத்து ஆய்வாளர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர். மொத்தம் 290 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சிறு குறைகள் இருந்த 17 வாகனங்களில் குறைகள் இருப்பது தெரியவந்தது. இதை சரி செய்து மீண்டும் கிருஷ்ணகிரி அலுவலகத்திற்கு சென்று மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அப்போது டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சார்பில் பஸ் டிரைவர்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தீ விபத்து ஏற்படும்போது டிரைவர்கள் எவ்வாறு தீயை அணைப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story