திருச்செங்கோடு அருகே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
திருச்செங்கோடு அருகே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்குட்பட்ட மாவட்ட சாலைகளான மல்லசமுத்திரம்-வையப்பமலை, வேலகவுண்டம்பட்டி- வையப்பமலை சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு பணி நடக்கிறது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கலவையின் தடிமன், அடர்த்தி, உறுதித்தன்மை போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நாமக்கல் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, உதவி பொறியாளர் அருண், திருச்செங்கோடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் சுதா மற்றும் சாலை ஆய்வாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story