இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் விரைவில் ஆய்வு


இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் விரைவில் ஆய்வு
x

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்க தயார்நிலையில் உள்ளதா என இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்க தயார்நிலையில் உள்ளதா என இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

அனுமதி

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ரூ.345 கோடியில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் முதல்கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுக்கான பாட வகுப்புகுள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர, மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கும் இந்த கல்லூரியில் தனித்தளத்தில் அவர்களுக்கான பேராசிரியர்கள் மூலம் பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் முடிவடைய உள்ளன. இதனை தொடர்ந்து 2-ம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

ஆய்வு

இதன்படி அதற்கு முன்னதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்து 2-ம் ஆண்டு கல்வி தொடங்க தகுதியாக உள்ளதா என்று அறிக்கை அளிக்க வேண்டும். அதன்பின்னர் தான் வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் விரைவில் ராமநாதபுரம் வர உள்ளனர்.

அவர்கள் மருத்துவ கல்லூரி வளாகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றை ஆய்வு செய்து 2-ம் ஆண்டு கல்வி தொடங்க அதற்கான கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள் உள்ளிட்டவை முழு அளவில் தயாராக உள்ளதா என்று ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு ஏற்ப கல்லூரியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நீட் தேர்வு நடைபெற்று முடிந்து உள்ளதால் அதற்கான முடிவுகள் வெளியானதும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அடுத்த முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும். தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி பணிகள் 80 சதவீதம் அளவில் முடிவடைந்து உள்ளன. மீதம் உள்ள 20 சதவீத பணிகள் முழுமைபடுத்தும் பணி என்பதால் 3 மாத காலத்திற்குள் முடிவடைந்துவிடும்.

அறுவை சிகிச்சை அரங்கு

மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருவதால் அதற்குஏற்ப மருத்துவ சாதனங்கள் விரைவில் வர உள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் அனைத்து பிரிவு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2-ம் ஆண்டு கல்வி பாட வகுப்புகள் தொடங்கும்போது அதற்கு ஏற்ப கூடுதல் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


Next Story