கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களையும் பார்வையிட்டார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களையும் பார்வையிட்டார்.

கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருக்கிறது. ஆற்றில் தண்ணீர் கரைபுண்டு ஓடுவதால் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கரையோர கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. ேமலும் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். இதையடுத்து மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆய்வு

கொள்ளிடத்தில் அதிக அளவு நீர்வரத்து வருவதால் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கித்தேஷ்குமார் மக்குவானா மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதா ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் அளக்குடி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை பார்வையிட்டனர்.

உணவு தரமாக உள்ளதா?

தொடர்ந்து அளக்குடி, ஆச்சாள்புரம் ஆகிய இடங்களில முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்டு, அங்கு தயார் செய்யப்பட்டு வரும் உணவு தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் எழில் ராஜா மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.


Next Story