தொடர் மழையால் பழுதடைந்த சாலைகள்
ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் தொடர் மழையால் பழுதடைந்த சாலைகளை முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாரலப்பள்ளி ஊராட்சியில் ஏக்கல்நத்தம் மலை கிராமம் உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த மலை கிராமத்திற்கு செல்லும் தார்சாலை சேதமடைந்தது. இதை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார். அப்போது ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரகுநாத், ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, நிர்வாகிகள் கிருஷ்ணன், முருகேசன், சதாசிவம், ராஜசேகர், நாகராஜ், சவுந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர் வடிவேல், ராஜா, சதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story