அக்னிபுரீஸ்வரர் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு


அக்னிபுரீஸ்வரர் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு
x

அக்னிபுரீஸ்வரர் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அகஸ்திய முனிவருக்கு தனி சன்னதி உள்ளது. பழைமைவாய்ந்த வன்னி மரமும் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு ஆய்வு செய்தார். அப்போது கோவிலில் தரை தளம் அமைப்பது, திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்பு கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், பக்தர் குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பன்னீர்செல்வம், சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story