சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் இன்று ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார்கள்.
குழுவினர் ஆய்வு
தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் இன்று (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்கள். இந்த குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் இன்று காலை 9.30 மணிக்கு ஓசூர் டைட்டான் உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தொடர்ந்து பேரண்டப்பள்ளி அரசு துணை சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் 11.30 மணிக்கு ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையிலும் அவர்கள் ஆய்வு செய்கின்றனர். பின்னர், 1 மணி அளவில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வுக்கூட்டம்
தொடர்ந்து மாலை 3 மணி அளவில், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலக கூட்டரங்கில், சட்டப்பேரவை பொது கணக்குக்குழு தலைவர் தலைமையில், கலெக்டர், செயலாளர், உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.