போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. திடீர் ஆய்வு
ராமேசுவரம் கோவில் மற்றும் நகர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதிவேடுகளை சிறப்பாக கையாண்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவில் மற்றும் நகர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதிவேடுகளை சிறப்பாக கையாண்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குருபூஜை விழா பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்ய நேற்றுமுன்தினம் தமிழக போலீஸ டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகை தந்தார். பசும்பொன் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று ராமேசுவரம் வருகை தந்தார். பின்னர் அவர் கோவில் மற்றும் நகர் காவல் நிலையத்திற்கு திடீரென நேரில் சென்று காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளையும், ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து கையெழுத்திட்டார். தொடர்ந்து தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு சென்று பதிவேடுகளையும் பார்வையிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைவரை சென்று கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார். அப்போது உடன் ராமேசுவரம் டி.எஸ்.பி. தனஞ்செயன், நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாராட்டு
நகர் மற்றும் கோவில் காவல் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஜி.பி. 2 காவல் நிலையங்களிலும் பதிவேடுகளை சிறப்பான முறையில் கையாண்டு வருவதற்காக 2 காவல் நிலையத்தில் உள்ள எழுத்தர்களுக்கும் தலா ரூ. 5000 சன்மானம் வழங்கப்படும் என்றுபாராட்டு தெரிவித்தார்.