கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் பல்வேறு மனுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, சட்டப்பேரவை மனுக்கள் குழு செயலாளர் சீனிவாசன், மனுக்கள் குழுவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், கிரி, கோவிந்தசாமி, சந்திரன், செந்தில்குமார், பிரபாகரராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், சட்டப்பேரவை மனுக்கள் குழு இணைச் செயலாளர் சாந்தி, சார்பு செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வு கூட்டத்தில் மனுக்கள் குழுத்தலைவர் கோவி.செழியன், 24 பயனாளிகளுக்கு ரூ.33.77 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

தரைப்பாலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய பொதுநலம் குறித்த மனுக்கள் தொடர்பான கள ஆய்வு மற்றும் செயல்படுத்த கூடிய பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஓசூர், டைட்டான் நிறுவனத்தில் 22 சதவீதம், தமிழக அரசின் பங்காக உள்ளது. இங்கு தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்படும் நச்சு காற்றுகள், கழிவுகள் சரி செய்யவும், அவற்றை சமப்படுத்துவதற்கு தேவையான 10 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஓசூர் ராமர் கோவில் தெருவில் இருந்து மத்தம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மழைக்காலங்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்து செல்ல முடியாமல் உள்ளது. தற்போது மாநகராட்சி சார்பில் ரூ.75 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டுவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மத்திகிரி கால்நடை பண்ணைக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்த தர, இக்குழுவின் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிகளில் ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, திட்ட இயக்குனர் வந்தனாகார்க், ஓசூர் துணை கலெக்டர் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story