வேளாண் பொருட்கள் ஆய்வு
வேளாண் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மானாமதுரை,
மானாமதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறை இயக்குனர் முனைவர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது இந்த வளாகத்தில் அமைந்துள்ள ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி ஏலக்கூடம் மற்றும் விற்பனை கூட அலுவலகம் ஆகியவற்றை பார்வை யிட்டார். விற்பனை கூடத்தில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விளைபொருட்கள் வரத்தினை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வணிகத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தற்போது செயல்பாடுகள் குறித்து அதிகாரியிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின்போது தனி அலுவலர் வேளாண் துணை இயக்குனர் முனைவர் சுரேஷ், சிவகங்கை விற்பனை செயலாளர் சாந்தி, விற்பனை குழு மேலாளர் கார்த்திகேயன், மானாமதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வை யாளர் தவப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர். வேளாண் அலுவலர் காளிமுத்து புவனேஸ்வரி மற்றும் உதவி வேளாண் அலுவலர் தங்க முத்துலட்சுமி ஆகியோர் உழவர் நண்பன், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், விற்பனைக்கூடம் மூலமாக மேற்கொண்ட வணிகம் பற்றி இயக்குனர் எடுத்துரைத்தனர்.