பரமக்குடி உழவர்சந்தையில் அதிகாரி ஆய்வு
பரமக்குடி உழவர்சந்தையில் அதிகாரி ஆய்வு செய்தார்.
பரமக்குடி,
பரமக்குடியில் உழவர்சந்தை தொடர்ந்து நல்ல முறையில் இயங்கி வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் இங்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை இயக்குனர் நடராஜன் திடீரென பரமக்குடி உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலைகளையும் விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் அவர்களது விளை பொருள்களை விற்பனை செய்ய வரும் விவசாயிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்குமாறு மேலாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அந்த ஆய்வின்போது வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் மூர்த்தி, ராமநாதபுரம் வேளாண்மை விற்பனை குழு செயலாளர் ராஜா, பரமக்குடி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சமுத்திர பாண்டியன், உதவி நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம், கனகலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.