நல்லம்பள்ளி அருகே கரும்பு கொள்முதல் பணியை அதிகாரி ஆய்வு


நல்லம்பள்ளி அருகே கரும்பு கொள்முதல் பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள சிக்கனம்பட்டிபுதூர், மூக்கனஅள்ளி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் கரும்புகளை பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சங்கரநாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோ, கூட்டுறவு துணைப் பதிவாளர்கள் அன்பழகன், கூட்டுறவு சங்க செயலாளர் கார்த்திகேயன், அசோக் குமார், ராஜேந்திரன், கிருஷ்ணன் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story