பிரபல சினிமா தியேட்டரில் அதிகாரிகள் ஆய்வு
சேலத்தில் பிரபல சினிமா தியேட்டரில் அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதி தின்பண்டங்களை பறிமுதல் செய்தனர்.
சேலம்
சேலத்தில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட சினிமா தியேட்டரில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, சிப்ஸ், பால், பிரட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்ட உணவு பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காலாவதியான அந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
Next Story