கெலமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ராயக்கோட்டை, கருக்கனஅள்ளி, திம்ஜேப்பள்ளி, நாகமங்கலம் மற்றும் ஊடேதுர்கம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், பள்ளி சமையல் அறை கட்டிடங்கள், எம்.ஜி.என்., ஆர்.ஜி.எஸ். திட்டப்பணிகளை ஆய்வு செய்த அவர் பணிகளின் விவரம், அதன் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தலட்சுமி, பயாஷ் அகமத், உதவி பொறியாளர்கள் தமிழ், முருகேசன், பணி மேற்பார்வையாளர் சம்பங்கி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story