ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில்சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரி ஆய்வு


ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில்சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:30 AM IST (Updated: 10 Jun 2023 12:45 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் பாலப்பாளையத்தில் இருந்து பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் ராசிபுரம் உட்கோட்டம் குருசாமிபாளையம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார். அப்போது கோட்ட பொறியாளர் குணா, ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story