அஞ்செட்டி அருகே மலை கிராமங்களில் கலெக்டர் சரயு ஆய்வு


அஞ்செட்டி அருகே மலை கிராமங்களில் கலெக்டர் சரயு ஆய்வு
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM IST (Updated: 26 Jun 2023 8:28 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே உள்ள மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சரயு ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சி கேரட்டி இருளர் இன மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் தெருவிளக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் வாழ்வாதரங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் இங்குள்ள குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும். குடியிருப்பு பகுதிகளை ததூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு போதிய மருத்துவ வசதி மற்றும் தடுப்பூசி உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் அஞ்செட்டியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் கூறினார்.

கெம்பக்கரை

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறன் மற்றும் கல்வி திறனை கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் அஞ்செட்டியில் நடைபெற்ற பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள சிறப்பு பஸ்களில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றவர்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து கலெக்டர் கெம்பக்கரை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, அஞ்செட்டி தாசில்தார் அனிதா, துணை தாசில்தார்கள் பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


Next Story