குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு


குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு
x

நாங்குநேரி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு பணி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு தலா ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதில் பொதுமக்கள் ரூ.5 நாணயம் செலுத்தி குடிநீர் பெற்று கொள்ளும் வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது நீண்ட நாட்களாக செயல்படாமல் காணப்படுகிறது. இதனை நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, ஏமன்குளத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது இறைப்புவாரி பஞ்சாயத்து தலைவர் மோகனா யோசுவா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோலியா மனோரஞ்சிதம், பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர் என்.சுடலை ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story