மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.
ஆம்பூர் நகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் மழைநீர் கால்வாய்கள் தூர்வார ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி எஸ்.கே.ரோடு பகுதியில் அமைந்துள்ள கால்வாய் தூர்வாரப்பட்டு வருவதை திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து மின்னூர் இலங்கை அகதிகள் மறு வாழ்வு முகாில் கட்டுமான பணிகள் பார்வையிட்டனர். மேலும் கென்னடி குப்பம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் கள பணியை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து சிகிச்சை பற்றி விசாரித்து அதை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டனர். மேலும் உழவர் சந்தையில் உள்ள தராசுகள் மற்றும் அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.