விருதுநகர், சாத்தூர் யூனியன்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


விருதுநகர், சாத்தூர் யூனியன்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

விருதுநகர், சாத்தூர் யூனியன்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

விருதுநகர் மற்றும் சாத்தூர் யூனியன்களில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஆனந்தகுமார் ஆய்வு செய்தார். விருதுநகர் யூனியன் துலுக்கப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ11.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளையும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து கற்பிக்கும் முறைகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் கேட்டறிந்தார். இதேபோன்று சாத்தூர் யூனியன் படந்தால் பகுதியிலும் இல்லம் தேடி கல்வித் திட்ட குழந்தைகளிடம் கற்றல் பணிகுறித்து கேட்டறிந்தார். மேலும் ரெங்கப்ப நாயக்கன்பட்டியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story