வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசுசிறப்பு செயலாளர் எம்.கருணாகரன் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசுசிறப்பு செயலாளர் எம்.கருணாகரன் ஆய்வு
x

வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசுசிறப்பு செயலாளர் எம்.கருணாகரன் ஆய்வு

திருப்பூர்

உடுமலை

உடுமலை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசுசிறப்பு செயலாளர் எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

தமிழக ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு சிறப்பு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான எம்.கருணாகரன் நேற்று உடுமலைக்கு வந்திருந்தார்.அவர் உடுமலை நகராட்சி பகுதியில் ரூ.14லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டிட கட்டுமான பணிகள், பொதுநிதியில் இருந்து ரூ.5லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வடிகால் தூர்வாரும்பணிகள், யு.கே.சி.

நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்

ரூ.1கோடியே91லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது அறிவு மைய கட்டிட கட்டுமான பணிகள் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ்ரூ.36லட்சத்து28ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஊராட்சி ஒன்றியம்

உடுமலைஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட

சின்னவீரம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின்கீழ்ரூ.81லட்சத்து50 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள், கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பம்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில்ரூ.1கோடியே8லட்சத்து27ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள், சமத்துவ புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் நடந்த மக்களைத்தேடி மருத்துவ முகாம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதையடுத்து கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மருள்பட்டி ஊராட்சியில் பட்டுவளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1லட்சத்து70ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை மற்றும் மல்பெரி சாகுபடியையையும், மொடக்குபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்துகிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ்ரூ.1லட்சத்து57ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஆசிரியர் கழிப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் ரூ.5லட்சத்து50ஆயிரம் மதிப்பீட்டில் நடக்கும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் என மொத்தம்ரூ.4கோடியே

44லட்சத்து82ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று

வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வு பணிகள் தமிழகஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலாளரும்மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான எம்.கருணாகரன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலையில் நடந்தது.




Next Story