வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சிறுகரும்பூர், வேகாமங்கலம் ஆகிய ஊராட்சியில் தோட்டக்கலை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை நேரடியாக விவசாயிகள் நிலத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து சிறுகரும்பூர் ஊராட்சியில் முதலாவது தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளிம் எடை, உயரம் அளவீடு செய்வதை பார்வையிட்டார்.
மேலும் அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு தரமாக, சுவையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் லதா, விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.